Dharmapuri: விடுதியில் கல்லூரி மாணவி குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம்!

தருமபுரியில் அரசினர் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்த மாணவி விடுதியிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அதிகாலையில் அந்த மாணவி தோழிகளிடம் வயிறு வலிப்பதாகத் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகளும், விடுதி காப்பாளரும் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விடுதி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில், மனோஜ்(வயது 21) என்பவருடன் மாணவி காதல் என்ற பெயரில் அவ்வபோது தனிமையிலிருந்து வந்ததும், விடுதியில் சேரும்போதே மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மனோஜ் மற்றும் மாணவியின் குடும்பத்தினருக்கு விடுதி நிர்வாகத்தினர், காவல் துறைமூலம் தகவல் தெரிவித்தனர். விடுதியில் தங்கி இருந்த மாணவிக்குக் குழந்தை பிறந்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *