“முன்னும் பின்னும் எடிட் பண்ணிட்டு கேட்டா மிரட்டுற மாதிரி தான் இருக்கும்!” – தருமபுரி தர்மச்செல்வன் தன்னிலை விளக்கம்

Advertisements

நான் சொல்வதை கலெக்டர், எஸ்பி கேட்க வேண்டும். நான் சொல்வதைத்தான் அனைத்து நிர்வாகங்களும் கேட்க வேண்டும். இங்கே கேம் ஆட இடம் கிடையாது. ஆடினால் அவன் கதை முடிந்தது – திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் (பொறுப்பு) தர்மச்செல்வன் பேசிய இந்த தாம் தூம் பேச்சு வைரலாகி, திமுக தலைமைக்கு தர்சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது. திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் குறுநில மன்னர்களைப் போல் செயல்படுவதாக அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிக்கட்சிகள் வரிந்துகட்டியுள்ளன. 27-ம் தேதி தரு​மபுரி​யில் கிழக்கு மாவட்ட திமுக-​வின் செயற்​குழு கூட்​டம் நடந்​தது.

சுமார் 25 பேர் மட்​டுமே கலந்​து​கொண்ட இந்​தக் கூட்​டத்​தில் தான் தர்​மச்​ செல்​வன் இப்​படிப் பேசி இருக்​கிறார். முன்​னாள் மாவட்ட பொறுப்​பாள​ரான பி.என்​.பி.இன்​பசேகரனுக்கு மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்பு வழங்​கப்​ப​டாத ஆதங்​கத்​தில் அவரது ஆதர​வாளர்​களே இந்த வீடியோவை வைரலாக்கி இருக்​கிறார்​கள் என்​றும், கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்ட தடங்​கம் சுப்​பிரமணி​யின் ஆதர​வாளர்​கள் தான் இதை பரப்பி இருக்​கிறார்​கள் என்​றும் திமுக வட்​டாரத்​தில் பலவாறாக பேச்சு அடிபடு​கிறது. இந்​நிலை​யில், தர்​மச்​செல்​வனை அவசர​மாக சென்​னைக்கு அழைத்து விளக்​கம் கேட்டு புத்தி சொல்​லி அனுப்பி இருக்​கிறது திமுக தலை​மை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *