Farmer Protest: நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு!

Advertisements

நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.அதேவேளை, போராட்டத்தைக் கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசுப் பேச்சுவார்த்தை நடத்தியது. 3 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நாடு தழுவிய அளவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியை சுற்றுயுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *