Sheikh Hasina:உக்கிரமடையும் போராட்டம்..வங்கதேச பிரதமர் ராஜினாமா.. நாடு கடந்து தப்பியோட்டம்?

Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டுப் பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் அண்மையில் போராட்டம் நடத்தினர். நாளடைவில் இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக உருமாறியது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா திறன்ற்ற அரசியலால் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். இதனால் வங்கதேசம் முழுவதும் பதற்றமான நிலை நிலவிவருகிறது.

நேற்று முதல் மாணவர்கள் மீண்டும் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைவிடதா போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது. வங்கதேச பாதுகாப்பு படையினர் இந்த வன்முறையை ஒடுக்க முயன்றனர். இந்தத் தாக்குதலில் மேலும் 100 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்திற்கு பலியாகியுள்ளனர்.

இதனிடையே, வங்கதேச ராணுவ அதிகாரிகள் நாட்டின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, அந்நாட்டு ராணுவ தளபதி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வங்கதேச ராணுவம் வலியுறுத்தியது. அதன்பின்னர், பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய 45 நிமிடம் காலக்கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வேறுவழியே இல்லாமல் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகச் சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கையோடு வெளிநாட்டுக்கு ஷேக் ஹசீனா தப்பிச் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *