
மாநில தேர்தலை கணக்கில் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்தியஅரசு அறிவித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்
தமிழக முதலமைச்சர் குமரி மாவட்டத்திற்கு அதிக வளர்ச்சி திட்டங்களை கொடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு 12,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2023-ல் எடுத்து முடித்திருக்க வேண்டும் என்றும் பீகார், மற்றும் தமிழகத்தில் நடைபெறயுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை தற்போது மத்தியஅரசு அறிவித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



