Bangladesh:நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா: ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்!

Advertisements

டாக்கா:பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டம் காரணமாக நேற்று காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்களிடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டுப் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டாரெனத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *