சோழவரத்தில் ஐ.ஓ.பி-யின் புதிய கிளை..!

Advertisements
 திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நாலாயிரத்து 177ஆவது கிளையை RMK கல்விக் குழுமத்தின் தலைவர் முனிரத்தினம் திறந்து வைத்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அதன் 4177ஆவது கிளை திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கிளையின் திறப்பு விழா வேலூர் மண்டல மேலாளர் ‌ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்றது.
ஆர். எம். கே. கல்விக் குழுமத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முனிரத்தினம் குத்து விளக்கேற்றி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய கிளையைத் திறந்து வைத்தார். பின்னர் மகளிர் சுய உதவிக் குழுவினர், தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முனிரத்தினம், வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை நாணயமாகத் திருப்பிச் செலுத்தினால் தானாக முன்வந்து எத்தனை கோடி வேண்டுமானாலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன் உதவி வழங்கும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சோழவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை மேலாளர் ‌ஜதின் ஆனந்த், ஆர் எம் கே கல்வி நிறுவனத்தின் ஊழியர்கள், சுதாகர், குணசேகரன், சோழவரம் முன்னாள் தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *