நீதித்துறைக்கு அமைச்சர் ஷாஜகான் வைத்த கோரிக்கை!

 நீதித்துறையில் உள்ள தவறுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய சட்ட நாள் விழா ஐயுஎம்எல் வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெற்றது. இதில், அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ராஜேஸ்வரன், அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் உரையாற்றினர். அப்போது பேசிய அமைச்சர் ஷாஜகான், நீதித்துறையில் உள்ள தவறுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்வில் ஐயுஎம்எல் வழக்கறிஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *