ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விமர்சனம்!

கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளைத் தவெக அரசு  புண்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியலமைப்பு நாளையொட்டிச் சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்றும், திருப்பரங்குன்றத்தின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுத்த தவெக அரசு கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று தீபம் ஏற்றுவதைத் தடுத்தவர்கள் நாளை கோவில்களை மூடிவிடுவார்கள் என்று குற்றஞ்சாட்டினார். தீபம் ஏற்றுவதைத் தடுத்தாலும் தமிழர்களின் வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ தடுக்க முடியாது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு 4800 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், அதில் 1253 ஏக்கர் நிலத்தை மட்டுமே மாநில அரசு கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *