எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு பெருங்குடியில் மகிழ்வித்து மகிழும் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பிரவீன் குமார் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சென்னை பெருங்குடியில், திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, மகிழ்வித்து மகிழ் கட்டளை சார்பாக பிரவீன் குமார் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் புடவை வழங்கப்பட்டது. 184 வது வட்டச் செயலாளர் தேவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 14 ஆவது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு, கேக் வெட்டி கட்சியின் நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு 500 பேருக்கு புடவையும், 500 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 184 ஆவது வட்டத்துக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி அமைப்புகள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

