திமுகவின் இரட்டை வேடம் – அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்!

ஆளுநரை கீழ்த்தரமாக பேசிய திமுக, தற்போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வழக்கிற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என அவரிடம் மனு அளித்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில்,  சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு, 3 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான 6 கூடுதல் புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், 39 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

இதன் பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது., மாநில முழுவதும் 4724 காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் செவிலியர்களை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத செவிலியர் உதவியாளர் பணியிடங்கள் தேவைக்கு ஏற்ப நிரப்பப்படும் என்று கூறினார்.

திமுகவிற்கு இரட்டை வேடம் இரட்டை நாக்கு என்பது புதிது அல்ல என்றும் கவர்னரை கீழ்த்தரமாக பேசியவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வழக்கிற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என அவரிடம் மனு அளித்திருப்பதாகத் தெரிவித்தார். டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *