தவெக ஆட்சி குறித்து ரங்கசாமி அதிரடி விமர்சனம்!

தமிழகத்தில் தற்போது  தவெக ஆட்சி சரி இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், ஆனைமலை வேட்டைக்காரன்புதூர் பகுதியில்  அழுக்குச்சாமி சித்தர் ஜீவசமாதியின் 107 ஆவது ஆண்டு குருபூஜை  கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காலை முதலே கஞ்சி பூஜை மற்றும் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதன் பின்னர் அன்னதான கூடத்தில் அமர்ந்து அன்னதானம் அருந்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கும் மற்றும் சித்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் போர்வைகளை வழங்கினார். இதனையடுத்து, அவரிடம் தமிழகத்தில் நடைபெற்று வரும் தவெக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழகத்தில் தற்போது  த வெ க ஆட்சி சரி இல்லை என்றும் குருபூஜைக்காக தரிசனத்திற்காக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதில், திரைப்பட நடிகர் சண்முகராஜ்வும்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *