விடுதியில் மாணவர்கள் தாக்கிக் கொண்டது பற்றி எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!

Advertisements

மதுரை செக்கானூரணி அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு விடுதியில் ஒரு மாணவனை நிர்வாணப்படுத்திச் செருப்பால் அடித்ததை முதலமைச்சரால் நியாயப்படுத்த முடியுமா? என்றும் வினவியுள்ளார். பெயர் சூட்டுவதால் மட்டும் சமூக நீதி வந்துவிடாது என்றும், விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்குத் தன் ஒழுக்கத்தைப் பேணும் கல்வியை உறுதி செய்வதிலும், அரசுப் பள்ளிகளைத் தரமாகக் கட்டமைப்பதிலும், ஆசிரியர் நியமனம் செய்து முறையாக நிர்வகிப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *