Sex Torture: உறவுக்கு வரமறுத்த மனைவி குத்திக்கொலை!

Advertisements

உறவுக்கு வரமறுத்த மனைவியைக் குத்தி கொன்ற கணவன்!

தருமபுரி அருகே செக்ஸ் டார்ச்சர் தகராறில் மனைவியைக் கழுத்தை நெரித்தும் கத்தியால் சரமாரியாகக் குத்திக்கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (62). விவசாயி. இவரது மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பெருமாளும், தினமும் கூலி வேலைக்குச் சென்று தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், பெருமாள் தினமும் மனைவிக்குச் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது தகராறு ஏற்படுவதும் இவர்களை அக்கம் பக்கத்தினர் சமாதனம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  மீண்டும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பெருமாள் தனது லுங்கியால் மனைவி தனத்தின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர், அருகில் கிடந்த கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த தனம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனையடுத்து பெருமாள் அதே கத்தியால் தனது கையை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனம் உடலைக் கைப்பற்றிப் பிரேத பிரேத பரிசோதனைக்காகத் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட பெருமாளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *