‘டயர் கில்லர்’ வேகத்தடையால் காயம்!

Advertisements

தானே:

தானே ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவாஜி பாத் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் ‘டயர் கில்லர்’ வேகத்தடை அமைக்கப்பட்டது.

வாகனங்கள் ஒரு வழிப்பாதையில்(ஒன்வே) விதிகளை மீறி நுழைவதை தடுக்க இந்த ஏற்பாடு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சரியாக வரும் வாகனங்கள் வேகத்தடையை எளிதாகக் கடந்து செல்ல முடியும்.

அதே நேரத்தில் விதியை மீறி எதிர்திசையிலிருந்து வாகனங்கள் சாலையில் நுழைய முயன்றால், வேகத்தடையில் உள்ள ராட்சத ஆணி வாகனத்தின் டயரை கிழித்து விடும்.

இந்த வேகத்தடை காரணமாகச் சிவாஜி பாத் சாலையில் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

கத்தடை, அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களின் கால்களையும் பதம் பார்த்து வருகிறது. இதுவரை அந்த வேகத்தடை காரணமாக 7 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “சிவாஜி பாத் சாலை ரெயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. எனவே இந்த வழியாகப் பொதுமக்கள் அதிகளவில் நடந்து செல்கின்றனர்.

பலருக்கு இந்த வேகத்தடை பற்றித் தெரியாது. எனவே அதில் நடந்து செல்லும் பொதுமக்களுக்குக் காலில் காயம் ஏற்படுகிறது” என்றார்.

மிதேஷ் ஷா என்பவர் கூறுகையில், “மாநகராட்சியின் நோக்கம் சரியானது தான். ஆனால் அதற்கு முதலில் அவர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல விசாலமான, ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்வார்கள். சாலையில் செல்லமாட்டார்கள்” என்றார்.

இது போன்ற ‘டயர் கில்லர்’ வேகத்தடைகளை வைப்பதற்கு பதில் வாகனங்கள் விதி மீறலில் ஈடுபடும் பகுதியில், போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்பு பணியில் நிறுத்தலாமென ராகுல் பிங்காலே என்பவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *