Child Missing: “சிறுமி கடத்தல்” – வாலிபரிடம் விசாரணை!

Advertisements

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் இவரது மகன் நவீன் (26) இவர் சேலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் கோயம்புத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி சேலத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

Advertisements

இந்த நிலையில் நேற்று அந்தச் சிறுமி திடீரென மாயமானார் இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். பின்னர் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் நவீன் தனது மகளைக் கடத்தியதாகப் புகார் கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் நவீனை பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *