
பெருங்களத்தூர் சவென்ந்து டே அட்வெண்டிஸ்ட்ஸ் திருச்சபை மீது குற்றச்சாட்டு முன் வைத்த சபை உறுப்பினர்கள் கூறிய கருத்திற்கு அட்வெண்டிஸ்ட்ஸ் நிர்வாக மேலாண்மை அதிகாரி சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த பெருங்களத்தூர் அட்வெண்டிஸ்ட்ஸ் தமிழ்நாடு, பாண்டிச்சேரி தலைமை அலுவலகம்மீது சரமாரி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் முன்வைத்த நிலையில்,
இதற்கு மறுப்பு தெரிவித்து அட்வெண்டிஸ்ட்ஸ் திருச்சபை மேலாண்மை அதிகாரி சுதாகர் ஜோஷ்வா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,
எங்கள் அலுவலகம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி தலைமை அலுவலகமாகச் செயல்படுகிறது. சபை உறுப்பினர்களை உள்ளே அனுமதிக்காமல் இருப்பதற்கு காரணம் கடந்த 10 நாட்களுக்கு முன் எங்கள் பிஷப் டேனியல் அவர்களிடம் பேச வேண்டும் என்பதால் நாங்கள் அவர்களை உள்ளே அனுமதி அளித்தோம் ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பிஷப்பை கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டாதால் இவர்களை இந்த முறை உள்ளே அனுமதிக்க மறுத்தோம் எனக் கூறினார்.
மேலும் செய்திகளிலும், சமூக வலைதளங்களில் எங்களைக் குறித்து அவதூறாகப் பதிவு செய்தது தவறான கருத்தாகும் இதற்கு நாங்கள் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து வருகிறோம் எனவும் மேலும் நிர்வாகச் சட்ட திட்டத்திற்கு உட்பட்டே எங்கள் பணியை மேற்கொண்டு வருகிறோம் எனவும் 60 கோடி ஊழல் செய்ததாகக் கூறியது அப்பட்டமான குற்றச்சாட்டு இதற்கு அடிப்படை ஆதாரம் கிடையாது என்றும் இவர்கள் அனைவரும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்து கேள்வி கேட்பதற்கு உரிமை இல்லை,
ஏனெனில் இவர்கள் வேறு மாவட்ட சபை உறுப்பினர்கள் அவர்கள் மாவட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து அவர்கள் தலைவர்களிடம் விவாதம் செய்யலாம் எனவும் கூறினார்
அதுமட்டுமின்றி அனைத்து சவென்ந்து டே அட்வெண்டிஸ்ட்ஸ் கிறிஸ்துவ ஆலயங்களை மூட வேண்டும் என்ற கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும். 1 கோ ரூபாய் நிலத்தை 6 கோடி கொடுத்து வாங்கினோம் என்று சொல்வது அடிப்படை ஆதாரமற்றது.எனவும்
எங்கள் நிர்வாகம் அரசாங்கத்திற்கு சரியான கணக்கு ஆவணங்களைக் காண்பித்துக் வருகிறோம், மேலும் கிறிஸ்துவ ஆலயங்களுக்குக் கொடுக்கும் காணிக்கை 1 ரூபாய் என்றாலும் கூட அதற்குச் சரியான ரசீதை வழங்கி வருகிறோம் எனவும் எங்கள் சவென்ந்து டே அட்வெண்டிஸ்ட்ஸ் தமிழ்நாடு, பாண்டிச்சேரி தலை அலுவலகத்தில் சபை உறுப்பினர்கள் கூறும் குற்றச்சாட்டு அனைத்தையும் மறுப்பதாகத் தெரிவித்தார்.


