Van Accident: தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

Advertisements

தொண்டி அருகே மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விற்பனையாளர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கார்த்திகா ஏஜென்சி என்ற பெயரில் குளிர்பானங்கள் மினரல் வாட்டர் ஆகியவை கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் தேவகோட்டையிலிருந்து தொண்டிக்கு விற்பனைக்காக ஒரு லட்சம் மதிப்பிலான குளிர்பானங்கள் மினரல் வாட்டர் ஆகியவற்றை bolero சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் அந்தோணி ஆரோக்கியசாமி, விற்பனையாளர் முஹம்மது முத்து என்பவருடன் வந்து கொண்டிருந்தபோது மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை பெருமானேந்தல் கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விற்பனையாளர் முஹம்மது முத்து காயத்துடன் தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் விபத்து நடந்த பகுதியில் பார்வையிட்டு விபரங்கள் கேட்டறிந்தார் மேலும் தொண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரனை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *