
Chandrayaan-3 LIVE Updates
திகிலான அந்த 17 நிமிடங்கள்… உன்னிப்புடன் கவனிக்கும் உலக நாடுகள்! – Chandrayaan-3 LIVE Updates

23 ஆகஸ்ட் 2023 03:43 PM இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றுகிறார் – பிரதமர் மோடி
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வுக்காக இஸ்ரோவுடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி இணைய உள்ளார். நிலவில் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்கு பிறகு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

23 ஆகஸ்ட் 2023 03.35 ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை! பாராட்டு தெரிவித்த மம்தா பானர்ஜி!
இந்தியாவின் சந்திர ஆய்வை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதில் கடுமையாக உழைத்த அனைவரின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்! சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தை நெருங்கி வரும் நிலையில், நாம் அனைவரும் ஒன்றாக நின்று அதன் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கத்திற்கு ஆரவாரம் செய்ய வேண்டும் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும் சந்திரயான்-3 திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை, அனைவரின் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள் என்றார்.

23 ஆகஸ்ட் 2023 03.18PMவாழ்த்து தெரிவித்த எலோன் மஸ்க்
சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெறுவதற்காக இந்தியர்கள் கோயில்கள் மற்றும் மசூதிகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்குவதற்காகப்
ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க், சந்திரயான் -3 இன் லட்சிய விண்வெளி பயணத்திற்கு இந்தியாவுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

23 ஆகஸ்ட் 2023 03.12PMசந்திரயான்-3 க்காகப் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள்
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.05 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்த நிகழ்வை ஒட்டுமொத்த உலக நாடுகளும் உற்றுநோக்கி வரும் நிலையில், சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெறுவதற்காக இந்தியர்கள் கோயில்கள் மற்றும் மசூதிகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் லக்னோவில், இஸ்லாமியர்கள் இந்தியாவின் இஸ்லாமிய மையத்தில் தொழுகை நடத்தி சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்குவதற்காகப் பிரார்த்தனை செய்தனர்.

23 ஆகஸ்ட் 2023 03.05PM சந்திரயான்-3 வெற்றிகரமாக இறங்க கூட்டு பிரார்த்தனை
செங்கல்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில்1500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியான சந்திரயான்-3 சந்திரனில் கால் பதிக்கவும், விண்வெளி அறிவியல் மற்றும் கிரக ஆய்வுகளில் இந்தியா உலகிற்கு வழிகாட்டவும் சந்திர பகவான் வழிகாட்ட வேண்டும் என்று சந்திரன் சன்னதியில் இன்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் திரண்டு இந்த வழிபாட்டில் பங்கேற்று உள்ளார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கியது. மாலைவரை இந்தப் பிரார்த்தனையைத் தொடர போவதாகக் கூறினார்கள்.

23 ஆகஸ்ட் 2023 2.55PM நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ள முதல் நாடு இந்தியா.!
சந்திரயான் – 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்று மாலை 5.40 மணியிலிருந்து தரை இறங்கும் பணி துவங்கிறது.

23 ஆகஸ்ட் 2023 2.53PM சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்கும் லேண்டர் – மணற்சிற்பம் வடிவமைப்பு…!
சந்திரயான் – 3 விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்குவதை முன்னிட்டு, அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மணற்சிற்பம் வடிவமைத்த மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்னாயக்!

23 ஆகஸ்ட் 2023 2.05PM கடைசி 20 நிமிடங்கள் சவாலான தருணம்: மாதவன் நாயர்
நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கோள்களின் ஆய்வுக்கான மிக முக்கியமான மைல்கல்லாக இந்தத் திட்டம் இருக்கப்போகிறது. சந்திரனின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் மேற்பரப்புக்கு இறங்கும் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் சவாலான தருணம்என்று மாதவன் நாயர் கூறியுள்ளார்.

23 ஆகஸ்ட் 2023 1.56PM விண்வெளியிலிருந்து சிக்னல் கொடுத்த சந்திரயான் -3
நிலவில் சாதகமாக உள்ள அனைத்து சமிக்ஞைகளும் பதிவு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டரிலிருந்து வரும் தரவுகளைப் பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

23 ஆகஸ்ட் 2023 1.51PM சந்திராயன் 3 – கிண்டி பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு!
நிலவில் சந்திராயன் 3 லேண்டர் தரையிறங்கும் நிகழ்வைக் கண்டு களிக்க, கிண்டி பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் பொதுமக்கள், மாணவர்கள் பெரிய திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

23 ஆகஸ்ட் 2023 1.35PM சந்திரயான் 3 வெற்றியடைய இந்தியா முழுவதும் சிறப்பு பிராத்தனை! சந்திரயான் -3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி, இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

23 ஆகஸ்ட் 2023 1:24PM சந்திராயன்-3, நிலவில் இறங்கும் முயற்சி வெற்றி பெறும் – விஞ்ஞானி வெங்கடேஸ்வரன். கடந்த முறை ஏற்பட்ட தோல்வியிலிருந்து படிப்பினை பெற்று உருவாக்கப்பட்ட, புத்தாக்கம் பெற்ற சந்திராயன்-3, நிலவில் இறங்கும் முயற்சி வெற்றி பெறும் என்று, விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- ஆகஸ்ட் 2023 1:12 PM மாணவர்களின் சிறப்புக் கண்காட்சி சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்குவதற்காக நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஜம்முவில் மாணவர்கள் சிறப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்து பாடல்களைப் பாடினர்.
Chandrayaan-3 LIVE Updates
பெங்களூரு: நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான்-3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை, இன்று மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008ல் சந்திரயான் விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் செலுத்தியது. இது நிலவைச் சுற்றி வந்து வெற்றிகரமாகச் செயல்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம், 2019ல் அனுப்பப்பட்டது.
இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டாலும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க வேண்டிய, லேண்டர் சாதனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நிலவில் மோதியது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், நிலவில் மெதுவாகத் தரையிறங்கும் வகையில், ஒவ்வொரு நொடிக்கும் திட்டமிட்டு, 650 கோடி ரூபாய் செலவில், சந்திரயான் – 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்திலிருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதன் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள, ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்திலிருந்து, நிலவில் தரையிறங்க உள்ள, ‘லேண்டர்’ சாதனம் கடந்த 17ம் தேதி பிரிந்து சென்றது. இது, நிலவில் இன்று மாலை 6:04 மணிக்குத் தரை இறங்க உள்ளது.
இதன் நேரலை ஒளிபரப்பு மாலை 5:20 மணி முதல் துவங்குகிறது.விக்ரம் எனப் பெயரிடப்பட்டுள்ள லேண்டர், நிலவில் தரை இறங்கியவுடன் அதன் உள்ளே இருந்து, பிரக்யானெனப் பெயரிடப்பட்டுள்ள, ‘ரோவர்’ வாகனம் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும்.
Chandrayaan-3 LIVE Updates
லேண்டர் சாதனம் மற்றும் ரோவர் வாகனம், நிலவில் மேற்பரப்பில், ஒரு நிலவு நாள், அதாவது, நம் பூமியின், 14 நாட்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்காக, இரண்டிலும் பிரத்யேக ஆய்வுச் சாதனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை நிலவின் மேற்பரப்பிலும், நிலவின் மேற்பரப்பிலிருந்து உள்ளே சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும். இதுவரை, அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியன் ஆகியவை மட்டுமே, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளைச் செய்துள்ளன.
விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாகத் தரையிறங்கினால், இந்தப் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இடம்பெறும். மேலும், நிலவில் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படாத, அதன் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையும் நம் நாட்டுக்குக் கிடைக்க உள்ளது. ரஷ்யா சமீபத்தில் அனுப்பிய, ‘லுானா – 25’ விண்கலத்தில் இருந்த லேண்டர் சாதனம், கட்டுப்பாட்டை இழந்து, நிலவில் மோதியது. இதனால், ரஷ்யாவின் நிலவை ஆய்வு செய்யும் திட்டம் தோல்வியடைந்தது. இந்நிலையில், சந்திரயான் – 3 திட்டத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் உன்னிப்புடன் கவனிக்கின்றன.
பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள் என்று கருதப்படும் நிலவில், சந்திரயான் – 3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.நிலவில் லேண்டர் சாதனம் தரைஇறங்க உள்ள, 17 நிமிடங்கள் மிகவும் முக்கியமானது. இதை, திகிலான 17 நிமிடங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

