
மேஷம்: அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.
வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலப் பலன்களை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும்.
பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களும் திரும்ப கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
பரிகாரம்:
புதன், வெள்ளி போன்ற நாட்களில் மகாலட்சுமி தேவிக்கு பூஜை செய்து வழிபடுவது, செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு விளக்கு போட்டு வழிபடுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் – 20-09-2023 காலை 08.45 மணி முதல் 22-09-2023 மாலை 03.35 மணி வரை.
ரிஷபம்: கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் குரு- ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக நெருக்கடி நிலவும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பண வரவுகள் சற்ற ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
கோபத்தை குறைத்துக் கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது.
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல், டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்:
தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி குரு கவசம் படித்து வழிபட்டால் குருவின் அருள் பரிபூரணமாய் கிட்டும், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் -22-09-2023 மாலை 03.35 மணி முதல் 24-09-2023 இரவு 07.18 மணி வரை.
மிதுனம்: மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 11-ல் குரு- ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு.
சிலரின் புதிய வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.
பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற கூடிய பலம் உண்டாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும்.
உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலப் பலன்களை அடையலாம். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும்.
பரிகாரம்:
முருக வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்வதும் மிகவும் நல்லது. கிருத்திகை, சஷ்டி, ஏகாதசி போன்ற நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம் – 24-09-2023 இரவு 07.18 மணி முதல் 26-09-2023 இரவு 08.28 மணி வரை.
கடகம்: புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு அடைய வேண்டிய அனுகூலத்தை அடைவீர்கள். சனி வக்ர கதியில் இருப்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமை குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உற்றார் உறவினர்கள் வழியில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
புதிய சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் சிறிய தடைக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை பெற முடியும்.
தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புபழழழ மனதிற்கு நிம்மதியை அளிக்கும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேசுவது நல்லது.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சிவ வழிபாடு செய்வதாலும் மன சங்கடங்கள் குறையும்.
சந்திராஷ்டமம் – 26-09-2023 இரவு 08.28 மணி முதல் 28-09-2023 இரவு 08.28 மணி வரை.
சிம்மம்: மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
ஜென்ம ராசியில் புதன், 9-ல் குரு- ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நெருங்கியவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும் நிலை, பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும்.
தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். இம்மாதத்தில் சூரியன் 1, 2-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 2-ல் இருப்பதாலும் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் பொறுமையுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது.
புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள்.
கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். வௌயூர் தொடர்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கிருந்த பணிசுமை குறைவதுடன் உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும்.
திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.
பரிகாரம்:
பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.
சந்திராஷ்டமம் – 01-09-2023 காலை 09.35 மணி முதல் 03-09-2023 காலை 10.38 மணி வரை மற்றும் 28-09-2023 இரவு 08.28 மணி முதல் 30-09-2023 இரவு 09.10 மணி வரை.
கன்னி: உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன், 8-ல் குரு- ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு.
கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமை குறையும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும்.
பண வரவுகள் தேவைக்கேற்ற படி இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் குரு சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காத காரணத்தினால் எதிலும் நீங்களே முன்நின்று செயல்படுவது நல்லது.
பெரிய முதலீடுகள் கொண்ட செயல்களை தற்போதைக்கு தவிர்க்கவும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
பரிகாரம்:
சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்-03-09-2023 காலை 10.38 மணி முதல் 05-09-2023 மாலை 03.00 மணி வரை மற்றும் 30-09-2023 இரவு 09.10 மணி முதல் 02-10-2023 இரவு 12.15 மணி வரை.
துலாம்: சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள துலா ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் புதன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்க கூடிய அமைப்புகள், எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
நீண்ட நாட்களாக இருந்த தேக்கங்கள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும், லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும்.
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். கணவன்& மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகமான பலன் உண்டாகும்.
பணம் கொடுக்கல்& வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும்.
பரிகாரம்:
முருக வழிபாடு செய்வதாலும், விநாயகரை வழிபாடு செய்வதாலும், சதுர்த்தி விரதம் இருப்பதாலும் மேன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 05-09-2023 மாலை 03.00 மணி முதல் 07-09-2023 இரவு 11.13 மணி வரை.
விருச்சிகம்: விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
ராசியாதிபதி செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதும் இம்மாதத்தில் 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும்.
ராகு 6-ல் இருப்பதால் உங்களுக்குள்ள சகலவித பிரச்சினைகளும் விலகும் அமைப்பு, எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தற்போது இருக்ககூடிய நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது, வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.
தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.
புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் அதன் மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். கடன்களும் ஓரளவு குறையும். அரசு வகையில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைப்பதால் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி பெறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைவதுடன் எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுக்க முடியும். ஒருசிலருக்கு கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
பரிகாரம்:
சனிப்ரீதியாக விநாயகருக்கு அருகம்புல் மாலையும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் சாற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறைந்து வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம் -07-09-2023 இரவு 11.13 மணி முதல் 10-09-2023 காலை 10.25 மணி வரை.
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 10-ல் செவ்வாய், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.
பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும்.
தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி உண்டாகும். கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனை பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடும், செவ்வாய்க்கிழமை துர்கை வழிபாடும் செய்து வந்தால் இல்லத்தில் சுபிட்சமும் நற்பலன்களும் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 10-09-2023 காலை 10.25 மணி முதல் 12-09-2023 இரவு 11.00 மணி வரை.
மகரம்: உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2&ஆம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, வீண் செலவுகளை குறைப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறையும்.
தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையிடாமால் இருப்பது நல்லது.
பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வண்டி வாகனங்களால் சற்று விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்-வாங்கலில் நெருங்கியவர்களே உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர்நீச்சல் போட வேண்டி வரும். ஒருசிலர் செய்யும் செயல்களால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகும். மாத பிற்பாதியில் 9-ல் சூரியன் சஞ்சரிக்கின்ற பொழுது ஒரு சில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். மேலதிகாரிகளிடம் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
பரிகாரம்:
ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் விலகும்.
சந்திராஷ்டமம் – 12-09-2023 இரவு 11.00 மணி முதல் 15-09-2023 பகல் 11.35 மணி வரை.
கும்பம்: அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் ஆகும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் செயல்படுவது நல்லது.
தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சலும், பண விரயங்களும் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்கின்ற போது கவனமாக இருப்பது, முடிந்தவரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியாக சற்று மந்தமான நிலை இருக்கும்.
உங்கள் சக்திக்கு மீறி செலவுகள் செய்ய நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பணப்பிரச்சினைகளை சமாளிக்க முடியும். கொடுக்கல்& வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன்& மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும்.
புத்திர வழியிலும் தேவையற்ற மனக்கவலைகள் உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் உழைப்பிற்கான பலன்களை அடைய இடையூறுகள் உண்டாகும்.
எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்:
சிவ வழிபாடு செய்வதாலும், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் 15092023 பகல் 11.35 மணி முதல் 1092023 இரவு 11.08 மணி வரை.
மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் சூரியன் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள்.
திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும்.
கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
பரிகாரம்:
ராகு காலங்களில் அம்மன் வழிபாட்டை செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும். சனிக்கிழமை சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 17-09-2023 இரவு 11.08 மணி முதல் 20-09-2023 காலை 08.45 மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்:
03.09.2023 ஆவணி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை
10.09.2023 ஆவணி 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை
11.09.2023 ஆவணி 25 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை
13.09.2023 ஆவணி 27 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி மகம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை
17.09.2023 ஆவணி 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
18.09.2023 புரட்டாசி 01 ஆம் தேதி திங்கட்கிழமை திரிதியை திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
21.09.2023 புரட்டாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை
27.09.2023 புரட்டாசி 10 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை


