Trending: சிறுமி பாம்புகளுடன் படுத்துத் தூங்கும் காட்சி!

அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்துத் தூங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது…

புதுடெல்லி: பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பைக் கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பதுண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்துத் தூங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தக் காட்சிகளில் சிறுமி பாம்புகளைக் கட்டிப்பிடித்தபடி தூங்குகிறாள். பாம்புகள் அவளது உடலைச் சுற்றியபடி நெளிவது நம்மைப் பதற வைக்கின்றன. ஆனால் அந்தச் சிறுமியோ எந்தப் பதட்டமும் இல்லாமல் பாம்பை அரவணைத்தபடி தூங்குவது நிஜமாகவே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலான இந்த வீடியோவை 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 62 ஆயிரம் பேர் இதைப் பகிர்ந்துள்ளார்கள். பலர் இதுகுறித்து ஆச்சரியப்பட்டுக் கருத்து தெரிவித்து உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ariana (@snakemasterexotics)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *