234-தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் – அமைச்சர் பொன் குமார்

Advertisements

வரும் சட்டமன்றத் தேர்தலில் 224-தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது, மீண்டும் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என்றும் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின், மாநில தலைவர் பொன் குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர் கட்சியின், கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம், மதுரையில், கட்சியின் மாநில தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியை தொடர்ந்து. கட்சியின் மாநிலத் தலைவர் பொன்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, 40 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலேயே பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்றும் தெரிவித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில், 224 தொகுதிகளிலும், தி.மு.க. வெற்றி பெறும் என்றும், தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது என்றும், மீண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றும் மாநிலத் தலைவர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *