
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் யோகி பாபு, மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துபெற்றார்…
புதுச்சேரி:
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம்வரும் நடிகர் யோகி பாபு புதுச்சேரி சட்டசபையில் உள்ள முதல்வர் ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமாகச் சந்தித்த யோகி பாபு முதல்வர் ரங்கசாமி அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியும், அவரின் கைகளில் திருநீறு பூசியும், ஆசி பெற்றார்.

அப்போது ஆசி வழங்கிய முதல்வர் ரங்கசாமிஇன்னும் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்றுவாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
முதல்வர் ரங்கசாமியை நடிகர் யோகி பாபு சந்திக்கவந்ததால் புதுச்சேரி சட்டசபையில் ரசிகர்கள் கூடியதால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.



