நாளை முதலமைச்சராகிறார் விஜய்….! எம்.எல்.ஏ-க்கள் பதவிப் பிரமாணத்திற்கு தயாராகும் தலைமைச் செயலகம்…..!

Advertisements

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று நாளை புதிய முதலமைச்சராக த.வெ.க தலைவர் விஜய் பதவியேற்க உள்ள நிலையில், புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகரை நியமிப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.

அங்கு சட்டமன்றச் செயலாளரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். நாளை விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, சட்டமன்றத்தில் நடைபெறும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளது .

அந்த அடிப்படையில், தற்காலிக சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து சட்டமன்ற செயலாளருடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *