ஐபிஎல் 2026: டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்…!

Advertisements
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதில், சிறப்பாக விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 87 ரன்களும், கார்த்திக் சர்மா 41 ரன்களும் எடுத்து அசத்தினர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *