
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி அதிரடியாக விளையாடி கைப்பற்றியது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரின் கடைசி போட்டி அகமதாபத்தில் நடைபெற்றது. இந்த, போட்டியியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதில், சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 73 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்னும் அடித்தனர்.
இதையடுத்து, 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவரில் 8 இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்தியா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

