அனைவரையும் இணைக்க வேண்டும் – 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன்..!

Advertisements

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது கூறியதில் , 2024-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வென்றிருக்க முடியும் . அ.தி.மு.க.வில் தொய்வு உள்ளது, பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம்.

நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் ஆகியோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறினோம்.

வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது.அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள், நிபந்தனை இல்லாமல் மீண்டும் வர தயார் என கூறுகிறார்கள்.

எந்த பொறுப்பும் தேவையில்லை என கூறுபவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும்.

பிரிந்த தலைவர்களை இணைக்கவில்லை என்றால் நாங்கள் அந்தப் பணிகளை மேற்கொள்வோம். யார், யாரை இணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்து கொள்ளலாம்.

என்னுடைய கருத்தை கூறி இருக்கிறேன், இது நடக்கவில்லை என்றால் நாங்கள் முயற்சி செய்வோம்.10 நாட்களில் முயற்சி எடுக்கவில்லை என்றால், இதே மனநிலையில் உள்ளவர்களை திரட்டி முயற்சி மேற்கொள்வோம்.

அ.தி.மு.க.வுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.  எங்களுடைய கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது ஆசை என கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *