ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி சாடல்..!

Advertisements

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பரப்புரை நடைபெற்றது.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் பேசி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி அமைந்த பின்பு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கேரள அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா கிளினிக்கை திமுக அரசு முடக்கியுள்ளதாகக் கூறிய அவர், அதிமுக ஆட்சி அமைந்த பின்பு நான்காயிரம் அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *