
கேரளத்தில் திருவோணத் திருநாள் பாரம்பரியச் சிறப்புடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிங்க மாதத்தில் வரும் திருவோணத் திருநாள் மலையாள மக்களால் ஓணத் திருவிழா என்னும் பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வெண்பட்டுச் சேலை அணிந்த பெண்கள் அத்தப்பூக் கோலமிட்டும் ஊஞ்சலில் ஆடியும் மகிழ்ந்தனர். ஆண்கள் மலையாளப் பாரம்பரியப்படி வேட்டி சட்டை அணிந்து ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளப் பாரம்பரிய மிக்க உணவு வகைகளுடன் அனைவருக்கும் ஓணம் சதயம் என்னும் பெயரிலான உணவு வழங்கப்பட்டது.
ஓணத் திநாளையொட்டிப் பூக்களால் கோலம் வரையும் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் சிறப்பாக அத்தப்பூக்கோலமிட்டனர்.
இந்த விழாவில் மாவலி மன்னன் போன்று வேடமணிந்த ஒருவர் தாழங்குடை பிடித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

