
எரிபொருள் நெருக்கடி உலகைப் பாதித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் 18 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் ஆயுதத் தளவாடத் தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவுக்கு மக்களின் ஆசி எப்போதும் உள்ளதாகத் தெரிவித்தார். பொருளுற்பத்தியில் தன்னிறைவு என்கிற கொள்கையைத் தமது அரசு பின்பற்றுவதாகவும், அதைப் பலரும் கிண்டல் செய்வதாகவும் கூறினார். தனது தேவைக்குப் பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நாடு ஒருபோதும் வளர்ச்சியடைய முடியாது என்றும் குறிப்பிட்டார்.
உலகம் முன்னெப்போதும் இல்லா வகையில் சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தைக் கடந்து வருவதாகவும், வளைகுடாவில் நிலவும் போர்ச்சூழலால் உலகம் இப்போது எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


