விஜய்க்குப் பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து..! தமிழகத்தில் வீசிய விஜய் புயல்.!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்துள்ள விஜய்யின் இந்த “பிளாக்பஸ்டர்” அரசியல் வருகையைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்..

தேர்தல் முடிவுகள் விஜய்க்குச் சாதகமாகத் தெரிந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.. மேலும் , “தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள திரு. விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..

ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இந்த வெற்றி. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலனுக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *