அண்ணாமலைக்கு புதிய தலைவர் பதவி : அமித்ஷா உத்தரவு..!

Advertisements
முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தற்பொழுது மீண்டும் புதிய தலைவர் பதவி வழங்கப்படுகிறது . இதனால் அண்ணாமலை தரப்பில் ஏற்பட்டு வந்த குழப்பங்களும் சர்ச்சைகளும் முடிவுக்கு வந்திருக்கின்றன. அதேசமயம் தற்பொழுது தமிழக பாஜக தலைவராக இருக்கும் நைனார் நாகேந்திரன் அப்செட்டில் ஆழ்ந்து ள்ளதாக சொல்கிறார்கள் .
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த அண்ணாமலை பதவி விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது . கர்நாடக காவல்துறையிலிருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.  இவர் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா  கட்சி மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. இதனிடையே,  அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார் . தனக்கென தனிப் புகழைத் தேடிக் கொள்கிறார் என பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதன் பெயரில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் பதிலுக்கு திருநெல்வேலியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து , அண்ணாமலைக்கு டெல்லி மேல் இடத்தில் ஏதாவது முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் இன்று வரை எந்த பதவியும் அண்ணாமலைக்கு வழங்கப்படவில்லை . இதனால் உற்சாகம் இழந்த அண்ணாமலை பாஜகவிலிருந்து பின்வாங்க தொடங்கினார் .
டெல்லி வேலிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் கூட அவர் கலந்து கொள்வது கிடையாது.  இந்த நிலையில் காரைக்குடி சிவகங்கை உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் . தமிழக அளவில் தலைவராக இருந்த அண்ணாமலையை ஆறு தொகுதிகளுக்குள் சுருக்கி விட்டதாக கூறி அவரது ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்தனர் .
இந்த நிலையில்,  தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி அந்த பதவியை விட்டு விலகினார் அண்ணாமலை . இதற்கிடையே அண்ணாமலை ஆதரவாளர்கள் திருநெல்வேலியில் தனியாக கூட்டம் போட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க தொடங்கினர் . இந்த நிலையில் சென்னை தி.நகரில் கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பற்றியும் பேசப்பட்டு இருக்கிறது. அப்பொழுது தமிழிசை சௌந்தரராஜன் , எல் முருகன் போன்ற மிகப்பெரிய தலைவர்களும் 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அப்படி இருக்கும் பொழுது அண்ணாமலைக்கு மட்டும் தனி சட்டம் போட முடியாது என பேசப்பட்டது .
இது குறித்து , டெல்லி பாஜக மேலிட அமைப்பாளர் பி எல் சந்தோஷ் அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.  அப்பொழுது அண்ணாமலை தனது கருத்து தெரிவிக்கும் பொழுது ஒரு தொகுதிக்கு கூட நான் பொறுப்பாளராக இருக்க தயாராக இருக்கிறேன்.  ஆனால் பொறுப்பாளர்கள் நியமிக்கும் பொழுது என்னை கலந்து ஆலோசிக்கவில்லை.  அது மட்டும் அல்லாமல் வேட்பாளர்கள் எதுவும் அறிக்கப்படாமல் பொறுப்பாளர்களை நியமித்து என்ன பிரயோஜனம்.  இந்த பொறுப்பாளர் அந்த தொகுதியில் போய் என்ன செய்வார் அவருக்குரிய பணிகள் எதுவும் தரப்படவில்லை என குற்றம் காட்டி இருக்கிறார் .
இதனிடையே , பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ விநாயகம் திடீரென அந்த பதிவில் இருந்து நீக்கப்பட்டார். இவர் கடந்த 11 ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்து வந்தார். தற்பொழுது அவருக்கு பதிலாக நாகர்கோவிலை சேர்ந்த பிரஷோப் குமார்  நியமிக்கப்படுகிறார் . தற்பொழுது பிரஷோப்குமார் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளராக பணியாற்றி வருகிறார் . வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிரஷோப் குமார் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளராக பதவி ஏற்க இருக்கிறார் .
அதே சமயத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள கேசவ விநாயகம் சமூக நல்லிணக்க பொறுப்பாளர் பதவியை பெறுகிறார். இந்த சூழ்நிலையில்,  அண்ணாமலைக்கும் புதிய பதவி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது .
இது தொடர்பாக , பிஎல் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைமை நிர்வாகிகள் டெல்லி பாஜக மேல் இடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .
அப்பொழுது தமிழகத்தில் உள்ள சக்தி கேந்திர பிரமுக் அமைப்பின் தலைவராக அண்ணாமலையை நியமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரையில் சக்தி கேந்திரா  என்பது மிக முக்கிய அமைப்பாகும். சக்தி கேந்திரா என்பது வாக்குச்சாவடிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதனை பலப்படுத்தும் பணியை செய்து வருகிறது . இதன் கீழ்,  மாநில மாவட்ட மண்டல அளவில் நிர்வாகிகள் இருக்கிறார்கள். பொதுவாக மூன்று வாக்குச்சாவடிகளுக்கு ஒரு சக்தி கேந்திரா பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் .
இப்படிப்பட்ட அமைப்புக்குத்தான் அண்ணாமலை தலைவராகிறார். அண்ணாமலைக்கு தமிழ்நாடு சக்தி கேந்திரா பிரமுக் தலைவர் பதவி வழங்கப்படுவது குறித்த கோப்புகள் தயாராகிவிட்டன.  வருகிற 14-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தமிழகம் வருகிறார். அப்பொழுது,  அண்ணாமலைக்கு இந்த பதவி வழங்கப்படுகிறது இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் அண்ணாமலை இந்த பணியை தொடங்குவார் என தெரிகிறது .
தற்பொழுது , இது குறித்து அண்ணாமலையிடம் ஆலோசனை செய்தபோது அந்த பதவி தனக்கு விருப்பமான பதவி தான் என்று கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . தமிழக பாஜகவை பொறுத்த வரையில் தேர்தல் பிரச்சாரங்களை செய்வது இந்த சக்தி கேந்திர அமைப்பு தான் எனவே அண்ணாமலை.  இதன் மூலம் பிரச்சார பீரங்கியாக மீண்டும் தனது பணியை தொடர்வார் .
இதனிடையே , திருநெல்வேலியில் அண்ணாமலை ஆதரவாளர்கள் தனிப்பட்ட ஒரு கூட்டம் நடத்தினார்கள்.  இது குறித்து நைனார் நாகேந்திரன் டெல்லிக்கு தகவல் தெரிவித்தார்.  பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவருக்கு தனியாக எதற்காக நற்பணி மன்றம் அமைக்க வேண்டும் என அவர் குரல் கொடுத்திருக்கிறார் ஆனால் டெல்லி மேலிடமோ அதனை கண்டு கொள்ளவில்லை .
இந்த நிலையில்,  அண்ணாமலைக்கு முக்கிய தலைவர் பதவி கொடுத்திருப்பதால் நைனார் நாகேந்திரன் அப்செட்டில் ஆழ்ந்துள்ளதாக சொல்கிறார்கள் . இதற்கு காரணம் தேர்தல் பிரச்சாரம் முதல் களப்பணிகள் வரை அண்ணாமலையை கலந்து ஆலோசித்த தான் நைனார் நாகேந்திரன் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்பொழுது ஏற்பட்டு இருக்கிறது என்பது முக்கிய செய்தியாகும்.
இதனிடையே அதிமுக தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு மீண்டும் இது போன்ற தலைவர் பதவி வழங்கக் கூடாது என்றும் டெல்லி மேல் இடத்துக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கிறது . இருந்தபோதிலும் இது பாரதிய ஜனதா கட்சியின் உள்காட்சி விவகாரம் இதில் அதிமுக தலையிடக்கூடாது என டெல்லி மேலிடம் கருத்து தெரிவித்துள்ளது .
இதனைத் தொடர்ந்து , தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் முழுவதிலும் அண்ணாமலையின் தீவிர பிரச்சாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் அண்ணாமலைக்கு பதவி வழங்குவது தொடர்பான சர்ச்சையும் தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *