Seeman: என் வீட்டு சாவுக்கு வராதவன் ஏன் ஓட்டு கேட்க வருகிறான்.. சீமான் காட்டம்!

Advertisements

என்னுடைய இறப்பு நிகழ்விற்கு வராதவன் எனது வீட்டு வாசலில் என்னுடைய வாக்கு கேட்டு மட்டும் எதற்காக வருகின்றான் என்ற கோபம் உங்களுக்கு ஏற்பட வேண்டும் என்று  சீமான் கூறியுள்ளார்.

நெல்லை பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சத்யா  இவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் வந்து தங்கினார்.தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் பேருந்துநிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தைத் திறந்த வேனில் நின்றபடி பேசத் தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-உயர்ந்த லட்சியத்தை கொண்டுள்ள பிள்ளைகள் சமரசமின்றி இந்தத் தேர்தலில் போட்டியிடு கின்றோம். அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். மத்தியில் கூட்டாட்சி மலர மாநிலத்தில் தன்னாட்சி மலர இந்த முறை வாய்ப்பு ஒன்றிய கட்சிகளை வீழ்த்துவது தான். இந்தியாவில் அனைவரும் கூடி பேசிச் சுழற்சி முறையில் ஆளுவது தான் சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

நரேந்திர மோடி இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்து ஒட்டு மொத்த அதிகாரத் தைச்செலுத்தியுள்ளார். இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி,  காங்கிரஸ் கட்சி மாறி மாறி ஆட்சி செய்வதால் மாற்றத்தை உருவாக்க முடியாது. இதனால் மாநிலத்தில் தன்னாட்சி உரிமையைப் பெற முடியாது. நம்வாழ்வாதாரத்தை பற்றிக் கவலைப்படாத அவர்களு க்கு நம் வாக்கு எதற்கு? என்னுடைய இறப்பு நிகழ்விற்கு வராதவன் எனது வீட்டு வாசலில் என்னுடைய வாக்கு கேட்டு மட்டும் எதற்காக வருகின்றான் என்ற கோபம் உங்களுக்கு ஏற்பட வேண்டும். இந்தத் தேசத்தை எழுச்சியும் புரட்சியும் வலிமையும் கொண்ட நாடாக மாற்ற உங்களை நம்பி தான் நாங்கள் இந்தப் புரட்சிகர அரசியலை  முன்னெடுத் துள்ளோம்.

மாற்றம் என்பது சொல் அல்ல அது செயல். மாறாது என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறிவிடும் என்கின்றார் மாமேதை மார்க்ஸ். நாட்டில் நல்லாட்சி மலர மக்களின் நன்மைக்காக நேர்மையாக உழைக்கக்கூடிய நாம் தமிழ்ர் கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை  நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சத்தியாவிற்கு மைக் சின்னத்தில் உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள் எனப் பேசினார்.

கூட்டத்தில் அக்கட்சியின்மாவட்டச்செயலாளர் தினகரன்,  மாவட்ட தலைவர் நாகலிங்கம், மாவட்ட வணிகர் பாசறை செயலாளர் ராமலிங்கம், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் மாரியப்பன், ஆலங்குளம் பேரூர் செயலாளர் சுரேஷ் சொக்கலிங்கம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *