Easter Festival 2024: ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு பூக்களில் விலை இரண்டு மடங்காக உயர்வு!

Advertisements

ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் பூக்களில் விலை இரண்டு மடங்காக உயர்வு – 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஆயிரம் ரூபாயாகவும் 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பு 1250 ரூபாயாகவும் உயர்வு – கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் பொதுமக்கள் பூக்களை வாங்கிச் செல்ல வந்துள்ளதால் தோவாளை பூச்சந்தை களைகட்டி உள்ளது.

தமிழகத்தில் பூச்சந்தைகளில் பிரசித்தி பெற்ற பூச்சந்தை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்செந்தை – இந்தப் பூச்சந்தைக்கு ஓசூர் நிலக்கோட்டை திண்டுக்கல் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பூக்கள் கொண்டு வந்தாலும் விசேஷ காலங்கள் பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட அதிகமான பூக்கள் கொண்டுவரப்படுகின்றன விலையும் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு மூன்று மடங்கு என அதிகரிக்கும் அந்தவகையில் நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டிருப்பதை முன்னிட்டு இன்று நல்லிரவு தேவாலயங்களில் சிறப்பு திருப்பதியில் நடைபெற உள்ளது எனவே பூக்களின் தேவை அதிகரிப்பு காரணமாகப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.

நேற்று 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று ஆயிரம் ரூபாயாகவும் 600 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ 1250 ரூபாயாகவும் 400 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ 750 ரூபாய் ஆகும் 100 ரூபாய்க்கு விற்ற சிவந்தி பூ 200 ரூபாயாகவும் 60 ரூபாய்க்கு விற்ற அரளிப்பூ 160 ரூபாயாகவும் ₹70-க்கு விற்ற ரோஜா பூ 120 ரூபாயாகவும் இப்படி அனைத்துப் பூக்களுமே இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது இருந்தாலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட இருப்பதால் தேவை அதிகரிப்பை பொறுத்து கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் பூக்களை வாங்கிச் செல்லக் குவிந்து வருவதால் தோவாளை பூச்செந்தை களைகட்டி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *