மிரட்டலான நடிப்பில் யாஷின் ‘டாக்ஸிக்’ ட்ரெலர் ரிலீஸ்..!

Advertisements

பிரபல நடிகர் யாஷ், நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல நடிகர் யாஷ், ‘டாக்ஸிக்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

யாஷ் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் மிரட்டியுள்ளார். வருகிற 26-ம் தேதி ‘டாக்ஸிக்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *