பசிபிக் கடலில் உருவான பயங்கர புயல்.. சீனாவைத் தாக்கத் தீவிரம்.!

பசிபிக் பெருங்கடலில் உருவான டால்பின் புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

பசிபிக் பெருங்கடலில் உருவான டால்பின் புயல் ஜப்பானின் ஒக்கினாவா நகரைக் கடுமையாகத் தாக்கியது. அங்குப் புயலின் தாக்கத்தால் ஐம்பதாயிரம் கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயலால் கூரைகள் பெயர்ந்ததில் ஆறுபேர் காயமடைந்தனர்.

ஜப்பானைக் கடந்த டால்பின் புயல் இன்றிரவு சீனாவின் கிழக்குக் கடற்கரையில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 100 மைல் வேகத்தில் புயல் கரையைக் கடக்கும்போது சீஜியாங் மாகாணத்தில் 50 செண்டிமீட்டர் அளவுக்குக் கனமழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாங்காயின் யாங்சான் துறைமுகத்தில் ஐந்நூறு கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *