seeman:300 பெண்கள் படிக்கும் அரசு பள்ளியில் 2 கழிப்பறை; பல நூறு கோடி ரூபாயில் சமாதியா?

சென்னை: 300 பெண்கள் படிக்கும் அரசு பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஆனால் பல நூறு கோடி ரூபாயில் சமாதி கட்டப்படுகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை:அண்ணா சாலையில் நடந்த மின் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் 3வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 300 மாணவிகள் படிக்கும் இடத்தில் 2 கழிவறைகள் தான் உள்ளன. ஆனால், பல நூறு கோடியில் சமாதி கட்டப்படுகிறது.

அரசியல் அறிவு உள்ளதா?
இந்த சூழலில், பல கோடி ரூபாய் செலவு செய்து, கார் பந்தயம் தேவையா? அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திவிட்டு மாணவர்களுக்கும், மகளிருக்கும் ரூ.1,000 கொடுக்கிறார்கள். துன்பத்தைத் தந்தவருக்கே மீண்டும் அதிகாரத்தைக் கொடுப்பதால் நமக்கு சிந்திக்கும் திறன் உள்ளதா? அரசியல் அறிவு உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

கள்ளச்சாராயம்
போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் போராட்டம் நடத்தப்படுகிறது. எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள். ஆனால் மீனவர் ஒருவர் உயிரிழப்பது குறித்து எந்த அமைச்சரும் பேசக் கூட இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *