தில்லியில் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார் மோடி..!

Advertisements

தில்லியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் உழவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.
தில்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண்துறைக்கான இரண்டு சிறப்புத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். விழாவுக்குப் பின் அவர்கள் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடியும் அவர்களுடன் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்தார்.

பயிர்த் தொழில், வேளாண் ஆராய்ச்சி ஆகியன குறித்து உழவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.அப்போது பேசிய உழவர்கள், பிரதமரின் மீன்வளர்ப்புத் திட்டம் புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளதாகத் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *