G20: இன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்…

இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் 2 நாள் நடைபெறுகிறது.

இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. உலக வல்லரசுகள் உள்பட முக்கியமான நாடுகளின் தலைவர்களை ஒரே நேரத்தில் வரவேற்க தயாராகும் இந்தியா, இதற்காகத் தலைநகரில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று மாலையில் இந்தியா வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தூய்மையான எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு நடத்த இருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *