
மு.க. முத்து மறைவுக்கு இரங்கல் கூறிய அரசியல் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானார். இவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து முதலமைச்சர் எக்ஸ் பதிவில் எனது அண்ணன் திரு.மு.க.முத்து அவர்களது மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொன்ன சகோதரர் திரு. செல்வப்பெருந்தகை, தோழர் திரு.கே.பாலகிருஷ்ணன், சகோதரர் எழுச்சித் தமிழர் திரு.தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, திரு.தமிமுன் அன்சாரி, திரு.வசீகரன், சகோதரர் துரை வைகோ, சகோதரி தமிழிசை சௌந்தரராஜன், திரு.கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரு.சத்யராஜ், திரு. விக்ரம் உள்ளிட்ட கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் – ஊடகவியலாளர்கள், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கலைப் இரங்கலைப் பகிர்ந்துகொண்ட சகோதரர் திரு. ராகுல் காந்தி, திரு. ஓ.பன்னீர்செல்வம், திரு. ஜி.கே.வாசன் மற்றும் எனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த திரு. சீமான் உள்ளிட்ட அனைவர்க்கும் நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.




