Seeman: கருச்சிதைவு ஏற்பட வைத்ததாக குற்றச்சாட்டு!

Advertisements

நடிகை விஜயலட்சுமியின் உணவில் அவருக்கே தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரைகளைக் கலந்து கொடுத்துச் சீமான் கருச்சிதைவு ஏற்பட வைத்ததாக வீரலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு…

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் சீமானை வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகக் கூறிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.

அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து பாதுகாப்பு தர வேண்டும் எனத் தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி கோயம்பேடு துணை கமிஷனரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துவிட்டு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், விஜயலட்சுமிக்கு ஏழு முறை கருச்சிதைவு ஏற்படுவதற்கு சீமானே காரணம். அவர் உண்ணும் உணவில் கருச்சிதைவு மாத்திரங்களை கொடுத்துக் கருச் சிதைவு செய்ய வைத்துள்ளார். சீமானுக்கு எங்கெல்லாம் சொத்து உள்ளது என்பது குறித்து ஆவணங்களைத் திரட்டி வருகிறோம். அதுகுறித்து உரிய நேரத்தில் புகார் அளிக்கப்படும்.

நான் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் தனக்கு தொலைபேசிமூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர். வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன் தலையிட்டபிறகு வழக்கின் நகர்வு மாறுகிறது. விஜயலட்சுமி பேச்சும் வேறு திசையில் செல்கிறது. உதவி கமிஷனர் கௌதமன் இந்த வழக்கில் தலையிடக் கூடாது எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *