
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு தொண்டர் படையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்சியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். திமுக, அதிமுக, ஆகிய கட்சிகளில் ஏற்கனவே தொண்டர் படை இருப்பது போல பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் தொண்டர் படையை உருவாக்க அவர் ஆலாசித்து வருகிறார்.
தொடர்ந்து தவெகவும் தற்போது தொண்டர் படை அமைத்து, தொண்டர் படையில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், வழக்கு பிரச்சினை காரணமாக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மாநில நிர்வாகிகள் கட்சி நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, கட்சிக்கு அவசர, அவசரமாக இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலைக்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கான பட்டியலை விஜய் தயாரித்து விரைவில் 2-ம் கட்ட தலைவர்கள் பட்டியலை விஜய் வெளியிட இருக்கிறார்.



