Priest: உயிரைப் பறித்த மைக்!

Advertisements

Electrocute | Priest | Thiruvarur

திருவாரூர் அருகே மந்திரங்கள் கூறுவதற்காக மைக்கை கையில் எடுத்த அர்ச்சகர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்…

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 42).இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு பணியிலிருந்த அர்ச்சகர் ஞானசுந்தரம் மந்திரங்கள் கூறுவதற்காக மைக்கை கையில் எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஞானசுந்தரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் எதிர்பாராத விதமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *