Advertisements

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டி உயிர்மாயிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் அதே பகுதியைச் சேர்ந்தச் சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், முத்துமணி தலைமையில் ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து வணிக வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த குபேந்திரனை அரிவாளால் வெட்டி உயிர்மாயித்து மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாராணையில், சிறுவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Advertisements




