இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த டிரம்ப் வலியுறுத்தல்..!

Advertisements

இஸ்ரேல் ஹமாஸ் போரை விரைந்து செயல்படுத்த இருதரப்பினருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார். இது தொடர்பாக இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில்,அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,போர் நிறுத்த திட்டத்தை இருதரப்பும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இதில், இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்து உள்ளன என்றும் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிக்கரமாகவும்,விரைவாகவும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நூற்றாண்டு பழமையான மோதலை விரைந்து முடிக்கவில்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய உயிரிழப்பின் ரத்தகளமானது தொடர்ந்து விடும் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *