
ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உகந்த ஊழலை இந்தியா விரைவாகக் கட்டமைத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லி பாரத மண்டபத்தில் வளரும் அறிவியல் தொழில்நுட்பம் புத்தாக்கம் என்னும் பெயரிலான மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். அதன்பின் மாநாட்டில் பேசிய அவர், இன்று சில்லறை வணிகம் முதல் சரக்குப் போக்குவரத்து வரையும், வாடிக்கையாளர் சேவை முதல் சிறாரின் வீட்டுப்பாடங்கள் வரை எங்குப் பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படும் வகையில் இந்தியா செயலாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நெறிமுறைக்குட்பட்ட மனிதனை நடுவாகக் கொண்ட செயற்கைநுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான சட்டகத்தை இந்தியா உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். வரும் பிப்ரவரி மாதத்தில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்னும் இலக்கை எட்டுவதில் இது முதன்மையான பங்களிப்பாற்றும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.



