திமுகவின் காட்டாட்சியை தூக்கி எறியத் தயாராக உள்ளனர் – எடப்பாடி.!

திமுக கட்சியின் காட்டாட்சியை மக்கள் தூக்கி எறியத் தயாராக உள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆலந்தூர் பிரச்சாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார். தான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதறிப்போய், மூன்று அமைச்சர்கள் விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் என்றார். தொடர்ந்து, ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்துவிட்டு, தற்போது பதறுவதால் “எந்தப் பயனும் இல்லை” என்று குறிப்பிட்டார். உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி எறியத் தயாராக உள்ளனர் என்றும் ஏப்ரல் 23 ஆம் தேதி , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி என்றும் தெரிவித்தார். இதையடுத்து, தமிழகம் வாழவேண்டும் என்றால் திமுக வீழவேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *