School Student Kidnap: 11-ம் வகுப்புப் பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞர்!

Advertisements

தாராபுரத்தில் 11-ம் வகுப்புப் பள்ளி மாணவி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானியின் மகன் மனாஃப் சுல்தான் (20) என்ற வாலிபர் 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியைக் காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்குறி கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணையில்11-ம் வகுப்புப் பள்ளி மாணவி தாராபுரம் கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியைக் கடத்திச் சென்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில் காணாமல் போன11-ம் வகுப்புப் பள்ளி மாணவியைப் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் தேடியும் கிடைக்காததால் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லையெனக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து 11-ம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற வாலிபர் மனாஃப் சுல்தான் என்பது தெரியவந்தது.

இதை அடுத்து மனாஃப் சுல்தான் என்ற வாலிபரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் மனாஃப் சுல்தான் என்ற இளைஞரைத் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம் தலைமையிலான போலீசார் இளைஞரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *