காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உறவினர்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், ஓட்டுனரான இவரது மகள் ஆர்த்தி ஒன்பது வயதான இவர் அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது ஆர்த்தி திடீரெனக் காணாமல் போனார்.
மேலும் வழக்கமாக விளையாடிவிட்டு வீட்டிற்கு மகள் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்த பெற்றோர்கள் மகள் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடும் பணியைத் துவக்கினர் ஆனால் சோலை நகர் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர் அதில் ஒன்றில் கூடச் சிறுமி செல்லும் வீடியோ பதிவுகள் இல்லை.
மேலும் சிறுமி விளையாடிய இடத்தின் அருகில் உள்ள அனைத்து வீடுகள், பாதாள சாக்கடைகள், என அனைத்து இடங்களிலும் போலீஸ் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.சிறுமி மாயமானது தொடர்பாக எந்தவித தகவலும் தெரியாமல் தேடப்பட்ட போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்காத முத்தியால்பேட்டை போலீசாரை கண்டித்து அவரது உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலை முத்தியால்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் சிறுமி விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று கூறினர் ஆனால் இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
