
வடக்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட ஆக்ரா – மதுரா வழித்தடத்தில் யார்டு மறுவடிவமைப்பு பணி நடக்கிறது.
இதனால் கேரளா மற்றும் தமிழகத்திலிருந்து வடமாநிலங்கள் வழியாகப் பயணிக்கும் 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
8 ரயில்கள் வழித்தடம் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் (எண்:12645) 2024 ஜனவரி 6, 13, 20, 27 மற்றும், பிப்ரவரி 3 ந்தேதி, மறுமார்க்கமாக நிஜாமுதீன் – எர்ணாகுளம் ரயில் (எண்:12646) ஜனவரி 9, 16, 23, 30 பிப்ரவரி 6ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
வைஷ்ணவி தேவி கோவில் – கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16318) ஜனவரி 15, 22, 29, பிப்ரவரி 5-ந் தேதியும், மறுமார்க்கமாகக் கன்னியாகுமரி – கட்ரா ரயில் (எண்:16317) ஜனவரி 12, 19, 26, பிப்ரவரி 2-ந் தேதி முழுவதும் ரத்தாகிறது.
கோவையிலிருந்து புறப்பட்டுத் திருப்பூர், ஈரோடு வழியாகப் பயணிக்கும் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) 2024 ஜனவரி 21, 28ந்தேதி, மறுமார்க்கமாகக் கோவை வருகையில் ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம் – புதுடெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12625) ஜனவரி 27, பிப்ரவரி 3-ந்தேதி ரத்தாகிறது. திருவனந்தபுரம் திரும்பும் ரயில் (எண்:12626) ஜனவரி 29, பிப்ரவரி 5-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.இத்துடன் சென்னை, மதுரை, நெல்லையிலிருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் 38 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


